< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
காரைக்கால் மீனவர்கள் 18 பேர் இலங்கை கடற்படையால் கைது
|3 Dec 2024 7:59 AM IST
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துள்ளது.
காரைக்கால்,
தமிழகம் மற்றும் காரைக்காலில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடிப்பதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர் கதையாகியுள்ளது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை இன்று சிறைப்பிடித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி 18 மீனவர்களை சிறைப்பிடித்ததோடு, 2 விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். கைதான மீனவர்களை இலங்கையில் உள்ள கங்கேசன் முகாமிற்கு அழைத்துச் சென்று இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.