< Back
மாநில செய்திகள்
நெல்லையில் 17.5 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நெல்லையில் 17.5 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல் - ஒருவர் கைது

தினத்தந்தி
|
9 March 2025 1:31 AM IST

விக்கிரமசிங்கபுரத்தில் போதைப்பொருட்கள் வைத்திருந்தவர் போலீசாரிடம் பிடிபட்டார்.

நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் போலீசாருக்கு போதைப்பொருட்கள் விற்பனை குறித்து தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது விக்கிரமசிங்கபுரம் மெயின் ரோட்டின் அருகே சந்தேகப்படும்படியாக நின்றவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர் சிவந்திபுரத்தை சேர்ந்த சின்னதுரை (வயது 33) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட 17 கிலோ 550 கிராம் போதைப்பொருட்களை விற்பனை செய்வதற்காக வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் சின்னதுரையை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்