< Back
மாநில செய்திகள்
17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்த விவகாரம்; போலீசார் தீவிர விசாரணை
மாநில செய்திகள்

17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்த விவகாரம்; போலீசார் தீவிர விசாரணை

தினத்தந்தி
|
24 Feb 2025 12:35 PM IST

17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே வடக்கு காட்டுப்பட்டி பகுதியில் 17 வயது சிறுமிக்கு திருமணம் நடந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த பகுதியில் சமூகநலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சிறுமிக்கு திருமணம் நடந்ததும், அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக திருப்பதி (21), மூக்கன் (60), ராணி (50), முத்து (62) ஆகிய நால்வர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்