16 வயது நர்சிங் மாணவி திடீர் கர்ப்பம்: தாய் புகார் - 2 பேர் கைது
|ஆசை வார்த்தை கூறி நர்சிங் மாணவியை கர்ப்பிணியாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். நர்சிங் பயிற்சி மையத்திற்கு சென்று வரும் வழியில் சிறுமியுடன் சிறு காவேரிப்பாக்கம் பகுதியை சேர்ந்த குலசேகரன் (26), வெங்கட், ஒலிமுகமது பேட்டை பகுதியை சேர்ந்த ரித்தீஷ் (21) ஆகிய ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் நண்பர்களாக பழகி வந்தனர்.
சிறுமியுடன் நெருங்கி பழகிய ஆண் நண்பர்கள் 3 பேரும் அடிக்கடி சிறுமியை வெளியில் அழைத்து சென்று ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தனர். இதன் காரணமாக சிறுமி கர்ப்பம் அடைந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் காஞ்சீபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குலசேகரன், ரித்தீஷ் ஆகியோரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய வெங்கட் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.