< Back
மாநில செய்திகள்
திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வின்போது பக்தர்களிடம் 15 சவரன் நகைகள் திருட்டு - போலீஸ் விசாரணை
மாநில செய்திகள்

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வின்போது பக்தர்களிடம் 15 சவரன் நகைகள் திருட்டு - போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
10 Nov 2024 7:11 AM IST

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்வின்போது பக்தர்களிடம் 15 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளதாக புகார்கள் பதிவாகியுள்ளன.

தூத்துக்குடி,

கந்த சஷ்டி விழாவையொட்டி திருச்செந்தூரில் 7 நாட்களில் 13 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த விழாவிற்கு 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதற்கிடையில், சூரசம்ஹார நிகழ்ச்சி நாளில் கூட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 4 செல்போன்கள் திருடப்பட்டுள்ளன.

அதே சமயம், சூரசம்ஹார நிகழ்வின்போது பக்தர்களிடம் 15 சவரன் நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும், 3 இருசக்கர வாகனங்களை காணவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் திருச்செந்தூர் கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் கைவரிசை காட்டியவர்களை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்