< Back
மாநில செய்திகள்
செல்போனில் ஆபாச வீடியோ காண்பித்து 13 வயது சிறுமி பலாத்காரம் - உறவினர் கைது
நீலகிரி
மாநில செய்திகள்

செல்போனில் ஆபாச வீடியோ காண்பித்து 13 வயது சிறுமி பலாத்காரம் - உறவினர் கைது

தினத்தந்தி
|
5 March 2025 4:28 PM IST

செல்போனில் ஆபாச வீடியோ காண்பித்து 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த உறவினர் கைது செய்யப்பட்டார்.

நீலகிரி,

நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதியின் 13 வயது மகள், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையே சிறுமியின் நடவடிக்கைகளில் சில நாட்களாக மாற்றம் ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக யாரிடமும் சரியாக பேசாமல் இருந்துள்ளார். அத்துடன் அவ்வப்போது உடல்நிலை பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி படிக்கும் பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்று உள்ளது. அப்போது நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதைத்தொடர்ந்து உறவினர் ஒருவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி, ஆசிரியரிடம் கூறினார்.

அதன்படி ஊட்டி போலீசார், சிறுமியிடம் மேற்கொண்டு விவரங்களை கேட்டறிந்தனர். அதில் ஈரோட்டை சேர்ந்த 36 வயது உறவினர் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், செல்போனில் ஆபாச வீடியோக்களை காண்பித்து அதேபோல் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறி பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமி தனது பாட்டி வீட்டுக்கு சென்றபோது அங்கு உறவினரும் வந்து பாலியல் தொல்லை கொடுத்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சிறுமியின் உறவினரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்