< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'சென்னை ஆலந்தூரில் வெள்ள மீட்பு பணிக்கு 13 குழுக்கள் அமைப்பு' - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்
|15 Oct 2024 7:00 AM IST
ஆலந்தூரில் வெள்ள மீட்பு பணிக்கு 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னையில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், சென்னையை அடுத்த ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட கோவூர், பெரியபனிச்சேரி, கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், மதனந்தபுரம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழைநீர் வடிகால் பணிகளை அமைச்சர் தாம்.மோ.அன்பரசன் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, மழைநீர் கால்வாய்கள் எவ்வாறு தூர்வாரப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரிகளிடம் அவர் கேட்டறிந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "எவ்வளவு பெரிய மழை வந்தாலும், ஆலந்தூர் தொகுதி மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஆலந்தூரில் வெள்ள மீட்பு பணிக்கு 13 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன" என்று தெரிவித்தார்.