< Back
மாநில செய்திகள்
சென்னை விமான நிலையத்தில் இன்று 12 விமானங்கள் ரத்து
மாநில செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் இன்று 12 விமானங்கள் ரத்து

தினத்தந்தி
|
20 Nov 2024 10:28 AM IST

சென்னை விமான நிலையத்தில் இன்று 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் 12 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. புவனேஸ்வர், கொல்கத்தா, பெங்களூர், திருவனந்தபுரம், சிலிகுரி உள்ளிட்ட 6 புறப்பாடு விமானங்கள் மற்றும் 6 வருகை விமானங்கள் என மொத்தம் 12 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவை அனைத்துமே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்த விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிர்வாக காரணங்கள் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் சமீப காலமாக விமான சேவைகள் திடீர் திடீரென ரத்து செய்யப்படுவது பயணிகளை அவதிக்குள்ளாக்கியுள்ளது.

மேலும் செய்திகள்