05-01-2025: இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்
|உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 5 Jan 2025 7:54 PM IST
சண்முகத்திற்கு விஜய் வாழ்த்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் புதிய மாநில செயலாளர் சண்முகத்திற்கு, த.வெ.க. தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்து உள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்ட செய்தியில், ஏழை, எளிய மக்களுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்த தங்களின் பணி வரும் காலங்களிலும் சமரசமின்றி தொடரட்டும் என அவர் தெரிவித்து உள்ளார்.
- 5 Jan 2025 7:15 PM IST
அண்ணா பல்கலைக்கழக விவகாரம்; ஞானசேகரன் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம்
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
இந்த வழக்கை சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. இந்நிலையில், அந்த குழு பரிந்துரையின் பேரில் ஞானசேகரன் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்துள்ளது.
- 5 Jan 2025 6:38 PM IST
தொழுகை நடத்த அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்
மதுரையில் திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதிக்க கோரி சிலர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இந்நிலையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டனர். இதனால், காவல் துறையினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
- 5 Jan 2025 6:16 PM IST
தெற்கில் இருந்து வந்த ஹேமா மாலினி பெண் இல்லையா? பிதூரி கேள்வி
பிரியங்கா காந்தியை பற்றி பா.ஜ.க.வை சேர்ந்த பிதூரி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இதுபற்றி பிதூரி நிருபர்களிடம் பேசும்போது, ஹேமா மாலினியும் கூட ஒரு பெண் தான். முதலில் யார் தவறு செய்தனரோ, அவர்கள் முதலில் மன்னிப்பு கோர வேண்டும். எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர் அவர். அவர் ஒரு பெண் இல்லை. ஆனால் தெரிந்த குடும்பத்தில் இருந்த வந்த ஒருவர், பெண் என்றால், எப்படி இது சாத்தியம்?
தெற்கில் இருந்து வந்தவர் ஹேமா மாலினி. இதனால் அவர் ஒரு பெண் இல்லையா? ஒவ்வொருவருக்கும் மதிப்பு கிடைக்க வேண்டும். காங்கிரஸ் இதனை தெளிவுப்படுத்த வேண்டும். அதன் மந்திரி சபையில் இருந்த லாலுவை மன்னிப்பு கேட்க வைத்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- 5 Jan 2025 5:41 PM IST
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் அறிவிப்பு
விழுப்புரத்தில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாட்டில் புதிய மாநில செயலாளராக சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- 5 Jan 2025 5:13 PM IST
தமிழக அமைச்சர் துரைமுருகன் திடீர் டெல்லி பயணம்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தி.மு.க. எம்.பி. ஜெகத்ரட்சகன் ஆகியோர் விமானம் மூலம் டெல்லிக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.
துரைமுருகன், கதிர் ஆனந்துக்கு சொந்தமான இடங்களில் 2 நாட்களாக அமலாக்கத்துறை சோதனை நடந்தது. இந்த நிலையில், அமைச்சரின் திடீர் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
- 5 Jan 2025 5:01 PM IST
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் இம்மாத இறுதியில் பதவியேற்க உள்ளார். ரஷியா - உக்ரைன் போரை விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதற்கான பணிகளில் அவர் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜெர்மனியில் இந்த வாரம் நடைபெறும் கூட்டத்தில், உக்ரைனின் வான் பாதுகாப்பை அதிகரிக்க நட்பு நாடுகளுக்கு மீண்டும் அழைப்பு விடுக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
- 5 Jan 2025 4:57 PM IST
வங்காளதேசத்தைச் சேர்ந்த 50 நீதிபதிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் இந்தியாவில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்க திட்டமிட்டிருந்தனர். அந்த திட்டத்தை வங்காளதேச இடைக்கால அரசு இன்று ரத்து செய்துள்ளது.
- 5 Jan 2025 4:55 PM IST
டெல்லியில் ஜனக்புரி மேற்கு பகுதி முதல் கிருஷ்ணா பூங்கா வரையிலான மெட்ரோவின் 4-ம் கட்ட விரிவாக்க பிரிவை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து உள்ளார். இதேபோன்று, ரிதலா-நரேலா-குந்திலி வழித்தடத்திற்கான அடிக்கல்லையும் அவர் நாட்டியுள்ளார்.
இந்த கிருஷ்ணா பூங்கா விரிவாக்க நிலையத்துடன் சேர்த்து, டெல்லி மெட்ரோ நெட்வொர்க்கானது, மொத்தம் 289 நிலையங்களையும் 394.448 கிலோ மீட்டரையும் உள்ளடக்கி இருக்கிறது.
- 5 Jan 2025 4:26 PM IST
த.வெ.க. சார்பில் சமத்துவ பொங்கல் விழா
விழுப்புரம்: கயத்தூர் அருகே தமிழக வெற்றிக்கழகம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு த.வெ.க. சார்பில் ஏறக்குறைய 397 பேருக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.