< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சென்னையில் ரெயில் மீது ஏறி விளையாடிய இளைஞர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு
|18 Jun 2024 10:09 AM IST
சென்னை கொருக்கு பேட்டையில் நண்பர்களுடன் சேர்ந்து சரக்கு ரெயில் மீது ஏறி விளையாடிக்கொண்டு இருந்த இளைஞர் மின்சாரம் தாக்கி பலியானார்.
சென்னை,
சென்னை கொருக்கு பேட்டையில் சரக்கு ரெயில் மீது ஏறி விளையாடிய இளைஞர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். 19-வயதான இளைஞர் கவின் சித்தார்த் தனது நண்பர்களுடன் சேர்ந்து சரக்கு ரெயில் மீது ஏறி விளையாடி இருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சார வயர் மீது கவின் சித்தார்த்தின் கை பட்டுள்ளது. அடுத்த நொடியே மின்சாரம் உடலில் பாய்ந்து கவின் சித்தார்த் தூக்கி வீசப்பட்டார்.
இதில் சம்பவ இடத்திலேயே கவின் சித்தார்த் உயிரிழந்தார். இதனை பார்த்த அவரது நண்பர்கள் கண்ணீர் விட்டு கதறினர். இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள ரெயில்வே போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள். ஆபத்தை உணராமல் சரக்கு ரெயில் மீது ஏறி விளையாடியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிரச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.