< Back
மாநில செய்திகள்
திருப்பத்தூர் அருகே சாரைப்பாம்பை சமைத்து சாப்பிட்ட இளைஞர் கைது - வனத்துறை அதிரடி
மாநில செய்திகள்

திருப்பத்தூர் அருகே சாரைப்பாம்பை சமைத்து சாப்பிட்ட இளைஞர் கைது - வனத்துறை அதிரடி

தினத்தந்தி
|
12 Jun 2024 10:14 AM IST

திருப்பத்தூர் அருகே சாரைப்பாம்பை சமைத்து சாப்பிட்ட இளைஞரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திருப்பத்தூர்,

திருப்பத்தூர் அருகே உள்ள பெருமாபட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் சாரைப்பாம்பு ஒன்றை அடித்து கொன்றுள்ளார். அதோடு அந்த பாம்பின் தோலை உரித்து துண்டு துண்டாக வெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளனர்.. பாம்பின் தோலை உரித்து, தண்ணீரில் அலசும் காட்சிகளை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூக .வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில் அவர் மீது வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அவரை கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், சாரைப்பாம்பை சமைத்து சாப்பிட்டதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்