< Back
மாநில செய்திகள்
தலைவரே! நீங்கள் நினைத்தீர்கள்..நாங்கள் செய்து காட்டி வருகிறோம் - மு.க.ஸ்டாலின் புகழ்மாலை
மாநில செய்திகள்

தலைவரே! "நீங்கள் நினைத்தீர்கள்..நாங்கள் செய்து காட்டி வருகிறோம்" - மு.க.ஸ்டாலின் புகழ்மாலை

தினத்தந்தி
|
2 Jun 2024 7:59 PM IST

இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை,

நீங்கள் நினைத்தீர்கள்.. நாங்கள் செய்து காட்டி வருகிறோம் என்று கலைஞரின் நூற்றாண்டு நிறைவை ஒட்டி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழ்மாலை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது:-

புகழால் அல்ல: செயலால் மறக்க முடியாத தலைவர் கலைஞர், அதிகாரத்தால் அல்ல; அன்பால் போற்றப்படும் தலைவர் கலைஞர்: இந்தியாவின் திசையை தீர்மானித்தவர் கலைஞர்; நீங்கள் இருந்து செய்ய வேண்டியதை உங்கள் மகனாக நான் செய்து வருகிறேன்; கலைஞர் உருவாக்கிய நவீனத் தமிழ்நாட்டை உன்னதத் தமிழ்நாடாக உயர்த்திக் காட்டி வருகிறோம்: இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் திரும்பிப் பார்க்கும் திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்