நீ சூரியன்.. நான் தாமரை: காயத்ரி ரகுராம் விமர்சனம்
|வெட்கங்கெட்ட திமுக; வெட்கங்கெட்ட பாஜக என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி காயத்ரி ரகுராம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
சென்னை,
அதிமுக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
நாட்டில் இரண்டு முறை பாலம் விழுந்தாலும் அல்லது பெண்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்தாலும் அவர்கள் கவலைப்படுவதில்லை. இதை விட, கலைஞர் கருணாநிதியை பாராட்டக் கூடிய ரூ.100 நாணயம்தான் டபிள் என்ஜின் சர்க்காருக்கு முக்கியமானது.
அனைத்து சிறுபான்மையினருக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. வெறும் ரூ.100 நாணயத்திற்கு இந்தியா கூட்டணி மற்றும் சிறுபான்மையினரை தி.மு.க. விட்டுக்கொடுத்துள்ளது. பா.ஜ.க. மற்றும் பெரிய உயிரியல் அல்லாத கடவுள் மோடி, சனாதன இந்துத்துவாவை விட்டுக்கொடுத்துள்ளார்கள். என்ன ஒரு 7 பொருத்தம்.
பணத்திற்காகவும், அதிகாரத்திற்காகவும் தி.மு.க., பா.ஜ.க. ஆகிய இரு கட்சிகளும் எதையும் செய்ய முடியும். மக்களும், கட்சிக்காரர்களும் ஏமாறுகிறார்கள். சித்தாந்தம் பகுத்தறிவு குப்பைத் தொட்டிக்கு சென்றது. #வெட்கங்கெட்ட_திமுக #வெட்கங்கெட்ட_பாஜக #நீ_சூரியன்_நான்_தாமரை" என்று தெரிவித்துள்ளார்.