< Back
மாநில செய்திகள்
உலக இயன்முறை மருத்துவ தினம் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
மாநில செய்திகள்

உலக இயன்முறை மருத்துவ தினம் - எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

தினத்தந்தி
|
8 Sept 2024 2:30 PM IST

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இயன்முறை மருத்துவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

உலக இயன்முறை மருத்துவ தினம் உலகளவில் உள்ள இயன்முறை மருத்துவர்களால் கொண்டாடப்படுகிறது. இத் துறையை சார்ந்தவர்கள் மக்களிடையே இயன்முறை மருத்துவத்தைப்பற்றி அதன் நன்மைகளையும் நுட்பங்களையும் எடுத்து சொல்கின்றனர். மக்களுக்கு உடலியக்கம், தசை பலம் பாதுகாத்தல், உடல் ஆரோக்கியம், மூட்டசைவு என பல விஷயங்களைப்பற்றி விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், இயன்முறை மருத்துவத்தையொட்டி, எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "உடல் ஆரோக்கியத்திற்கும், தடையில்லா இயக்கத்திற்கும் உறுதுணையாக இருக்கும் இயன்முறை மருத்துவத்தின் மகத்துவத்தை சமூகத்திற்கு எடுத்துக் கூறும் நாளாக கொண்டாடப்படும் உலக இயன்முறை மருத்துவ தினத்தில், அனைத்து இயன்முறை மருத்துவர்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்