விக்கிரவாண்டி தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் யாருக்கு சாதகம் - ஒரு பார்வை
|விக்கிரவாண்டி சட்டசபைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருந்தவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6ம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார்.
புகழேந்தி மறைவையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தலின்போதே விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக அறிவிப்பு வெளியாகவில்லை.
இதனிடையே, நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜுலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் 14-ம் தேதி ( வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
இத்தொகுதியில் மீண்டும் தி.மு.க. போட்டியிடுகிறது. தி.மு.க.வுக்கு ஆதரவு அளிப்போம் என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
கடந்த முறை போல இங்கு அ.தி.மு.க. போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து பா.ஜ.க. கூட்டணி சார்பில் பா.ம.க போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விக்கிரவாண்டி தொகுதியில் கடந்த தேர்தல்களில் ஒவ்வொரு கட்சிகளும் பெற்ற வாக்கு விவரம் வருமாறு :-
2021-ம் ஆண்டு
2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் இங்கு தி.மு.க வெற்றி பெற்றது.
வாக்கு விவரம்
என். புகழேந்தி (தி.மு.க.) - 93,730
ஆர்.முத்தமிழ்செல்வன்(அ.தி.மு.க.)- 84,157
ஷீபா ஆஸ்மி(நாம்தமிழர்)- 8216
அய்யனார்( அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்)- 3053
2019- இடைத்தேர்தல்
2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்ற ராதாமணி உடல்நலக்குறைவு காரணமாக மரணம் அடைந்ததால் இங்கு 2019ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது.
வாக்கு விவரம் வருமாறு:-
முத்தமிழ்செல்வன் (அ.தி.மு.க.)- 1,13,766
என்.புகழேந்தி (தி.மு.க.)- 68,842
கந்தசாமி (நாம்தமிழர்)- 2912
2016 சட்டசபை தேர்தல்
கே.ராதாமணி (தி.மு.க.)- 63757
ஆர்.வேலு (அ.தி.மு.க.) -56,845
சி.அன்புமணி (பா.ம.க) 41,428
ஆர்.ராமமூர்த்தி( மார்க்சிஸ்ட் கம்யூ)- 9981
எஸ். ஆதவன் (பா.ஜ.க.) - 1291
நோட்டா -1385
2011 சட்டசபை தேர்தல்
ஆர்.ராமமூர்த்தி( மார்க்சிஸ்ட் கம்யூ)-76,656
கே.ராதாமணி (தி.மு.க.)-63,756
கே.ராமமூர்த்தி (சுயே) -2442
ஏ.கண்ணதாசன்( புரட்சி பாரதம்)- 2212