< Back
மாநில செய்திகள்
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிய வாட்ஸ் அப் சேனல் தொடக்கம்
மாநில செய்திகள்

தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிய வாட்ஸ் அப் சேனல் தொடக்கம்

தினத்தந்தி
|
10 Jun 2024 7:43 PM IST

அரசின் திட்டங்களை வாட்ஸ் அப் சேனல் மூலம் இனி பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

சென்னை,

தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொது மக்கள் அறிந்திட செய்தி மக்கள் தொடர்புத் துறையில் வாட்ஸ் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. "TNDIPR, Govt of Tamilnadu" என்ற பெயரில் வாட்ஸ்ப் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் தளம் மற்றும் யூ டியூப் பக்கங்களை தொடர்ந்து தற்போது வாட்ஸ் அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது. பொது மக்கள், கியூ ஆர் கோடினை ஸ்கேன் செய்து அரசின் திட்டங்களை வாட்ஸ் அப் சேனல் மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்