< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்

சிறையில் இருந்து வெளியே வந்தவுடன் செந்தில் பாலாஜி கூறியது என்ன?

தினத்தந்தி
|
26 Sept 2024 8:11 PM IST

என் மீதான பொய் வழக்கில் இருந்து விரைவில் மீண்டு வருவேன் என செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

சென்னை,

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கிய நிலையில், சென்னை புழல் சிறையில் இருந்து 471 நாட்கள் கழித்து வெளியே வந்துள்ளார்.

வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜிக்கு திமுக தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்து வருகிறார்கள். அப்போது ஜாமீனில் வெளியே வந்தது குறித்து செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்து அவர் பேசியதாவது;

"என் மீது அன்பும், நம்பிக்கையும், பாசமும் வைத்திருந்த கழகத் தலைவர் முதலமைச்சருக்கு வாழ்நாள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது போடப்பட்ட இந்த பொய்வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். என் மீதான பொய் வழக்கில் இருந்து விரைவில் மீண்டு வருவேன்" என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்