விக்கிரவாண்டி - 3 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தாமதம்
|விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் மை வைக்கப்படுகிறது.
விக்கிரவாண்டி,
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் மாதம் 6-ம் தேதி மரணம் அடைந்தார். இதையடுத்து, விக்கிரவாண்டி தொகுதிக்கு இன்று இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக 276 வாக்குப்பதிவு மையங்களிலும் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். வாக்காளர்களுக்கு இடது கை நடுவிரலில் மை வைக்கப்படுகிறது.
இந்தநிலையில், விக்கிரவாண்டி தொகுதியில் 3 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஒட்டன்காடுவெட்டி, மாம்பழப்பட்டு, காணை ஆகிய மையங்களில் வாக்குப்பதிவு தாமதம் ஏற்பட்டுள்ளது. மின்னணு வாக்கு இயந்திரத்துடன் இணைக்கப்பட்டுள்ள வயர் பழுதால் வாக்கு செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இயந்திரத்தை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். காலை 9 மணி நிலவரப்படி 20 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.