< Back
மாநில செய்திகள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மந்த கதியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை
மாநில செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: மந்த கதியில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கை

தினத்தந்தி
|
13 July 2024 10:23 AM IST

ஒரு சுற்றின் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகே அடுத்த சுற்றுக்கான எண்ணிக்கை தொடங்குகிறது.

விக்கிரவாண்டி,

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்த்லில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 20 சுற்றுகளாக வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. வழக்கமாக தபால் ஓட்டு முடிந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியதும் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்படையும். ஆனால், விக்கிரவாண்டி தொகுதியில் மந்த கதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

2 மணி நேரம் ஆகியும் வெறும் 3 சுற்றுகள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. ஒரு சுற்றின் முடிவு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகே அடுத்த சுற்றுக்கான எண்ணிக்கை தொடங்குகிறது. அதேபோல, ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே, அடுத்த சுற்றுக்கான வாக்கு இயந்திரங்கள் எடுத்து வரப்படுகின்றன.

மேலும் செய்திகள்