< Back
மாநில செய்திகள்
திமுகவின் ஊதுகுழலாக விஜய் செயல்பட்டு வருகிறார் - அர்ஜுன் சம்பத்
மாநில செய்திகள்

திமுகவின் ஊதுகுழலாக விஜய் செயல்பட்டு வருகிறார் - அர்ஜுன் சம்பத்

தினத்தந்தி
|
5 July 2024 7:16 AM IST

நீட் தேர்வில் எந்த பிரச்சினையும் கிடையாது என்று அர்ஜுன் சம்பத் கூறினார்.

தஞ்சை,

கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

நடிகர் விஜய் திமுகவின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார். அவருக்கு பல்வேறு நிர்ப்பந்தங்களை திமுக அரசு ஏற்படுத்தி இருக்கும். திமுகவினர், சட்டசபையில் நீட்தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். அதனை ஆதரித்து விஜய் பேசி இருப்பதை பார்க்கும்போது திமுகவின் ஊதுகுழலாகத்தான் அவர் இருப்பார் என நினைக்க தோன்றுகிறது.

நீட் தேர்வில் எந்த பிரச்சினையும் கிடையாது. அதில் இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளை தடுக்க மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. விஜய் நேரம் ஒதுக்கி கொடுத்தால் நீட் தேர்வு மூலம் தமிழகத்தில் எத்தனை ஏழை, எளிய மாணவர்கள் பயனடைந்துள்ளனர் என்பதை அவருக்கு நேரில் விளக்கம் அளிக்க இந்து மக்கள் கட்சி தயாராக உள்ளது.

விஜய்யை இன்னொரு எம்.ஜி.ஆர். என மக்கள் நினைத்தனர். ஆனால் அவர் தற்போது இன்னொரு கமல்ஹாசனாக மாறி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்