< Back
மாநில செய்திகள்
வேங்கைவயல் வழக்கு: சி.பி.சி.ஐ.டி-க்கு மேலும் ஒரு மாதம் அவகாசம்
மாநில செய்திகள்

வேங்கைவயல் வழக்கு: சி.பி.சி.ஐ.டி-க்கு மேலும் ஒரு மாதம் அவகாசம்

தினத்தந்தி
|
20 Sept 2024 4:55 AM IST

வேங்கைவயல் வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த நிலையில் இவ்வழக்கில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய மேலும் ஒரு மாதம் அவகாசம் கேட்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதை ஏற்று ஒரு மாதம் அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்