திமுகவுடன் தோள் கொடுக்கும் கட்சி விசிக: ஆ.ராசா
|திமுகவுடன் தோள் கொடுக்கும் கட்சி விசிக என்று எம்.பி. ஆ.ராசா கூறினார்.
ஈரோடு,
ஈரோட்டில் திமுக எம்.பி. ஆ.ராசா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
மதவாதத்தை ஒழித்து, சமூகநீதியை காப்பதில் தி.மு.க.வுடன் தோள் கொடுக்கும் அரசியல் கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. இந்த சூழலில் அந்த கட்சியில் புதிதாக சேர்ந்திருக்கும் ஒருவர், கொள்கை புரிதல் இல்லாமல் பேசியிருப்பது கூட்டணி அறத்துக்கும், அரசியல் அறத்துக்கும் ஏற்புடையது அல்ல.
இடதுசாரிகள் சிந்தனையில் தீர்க்கமான ஆழ்ந்த நம்பிக்கை உள்ள தொல். திருமாவளவன் நிச்சயமாக இந்த கருத்தை ஏற்கமாட்டார். எனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியில் புதிதாக சேர்ந்திருப்பவர், .திருமாவளவனின் ஒப்புதலோடு பேசியிருக்க மாட்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் இதனை ஏற்கமாட்டார்கள். இதுபோன்ற குழப்பத்தை ஏற்படுத்துபவர்கள் மீது தொல்.திருமாவளவன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.