< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு
|12 July 2024 11:40 AM IST
முதல் அமைச்சருடனான இந்த சந்திப்பின் போது, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து திருமாவளவன் பேசியிருக்கலாம் எனத் தெரிகிறது.
சென்னை,
முதல் அமைச்சர் மு.க ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவன் இன்று சந்தித்து பேசினார். சென்னை தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. முதல் அமைச்சருடனான இந்த சந்திப்பின் போது, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேசியிருக்கலாம் என தெரிகிறது.
குறிப்பாக நீட் தேர்வு விவகாரம், கிரிமினல் சட்ட விவகாரம் ஆகியவை குறித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல, ஆம்ஸ்ட்ராங் படுகொலை வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகளையும் திருமாவளவன் வைத்து இருக்கலாம் என தகவல் வெளியாகியிருக்கிறது.