< Back
மாநில செய்திகள்
பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான வேன்: 14 பேர் காயம் - மருத்துவமனையில் அனுமதி
மாநில செய்திகள்

பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான வேன்: 14 பேர் காயம் - மருத்துவமனையில் அனுமதி

தினத்தந்தி
|
9 July 2024 1:20 PM IST

மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் பாலத்தில் மோதி வேன் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 14 பேர் காயமடைந்தனர்.

எட்டயபுரம்,

மதுரையை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 25 பேருடன் ஒரு வேனில் தூத்துக்குடி மாவட்டம் குறுக்கு சாலை அருகே கொல்லம் பரம்பில் இருக்கும் பத்திரகாளியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளனர்.

வேனை அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (47) என்பவர் ஓட்டியுள்ளார். மதுரை - தூத்துக்குடி நெடுஞ்சாலையில் எட்டயபுரம் காவல் நிலையம் அருகே வந்தபோது வேன் திடீரென நிலைத் தடுமாறி சாலையில் இருந்து கீழே இறங்கி அங்கிருந்த பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் வேனில் பயணம் செய்த ஈஸ்வரன் உள்ளிட்ட 14 பேர் காயம் அடைந்தனர்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் எட்டயபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்