ரூ. 3.50 கோடி மதிப்புள்ள 318 ஐபோன்கள் திருட்டு - 2 பேர் கைது
|318 ஐபோன்களை திருடிய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
டெல்லி,
தலைநகர் டெல்லியின் மகிபல்பூரை சேர்ந்த தொழிலதிபர் ரமேஷ்வர் சிங். இவர் ஐபோன் டீலராக செயல்பட்டு வருகிறார்.
இதனிடையே, வட இந்தியாவிற்கு விநியோகம் செய்ய ரமேஷ்வர் மகிபல்பூரில் உள்ள தனது குடோனில் நூற்றுக்கணக்கான ஐபோன்களை வைத்திருந்தார். இதில், 3.50 கோடி ரூபாய் மதிப்புள்ள புத்தம்புதிய 318 ஐபோன்கள் கடந்த 17ம் தேதி திருடு போயின.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக ரமேஷ்வர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். இதில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட ரமேஷ்வர் சிங்கின் வாகனத்தில் ஐபோன்கள் திருடி செல்லப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ரமேஷ்வர் சிங்கிடம் டிரைவராக வேலை செய்த மந்தீப் சிங் மற்றும் அவரது கூட்டாளி சச்சின் இணைந்து ஐபோன்களை திருடியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பஞ்ச் குலா பகுதியில் பதுங்கி இருந்த மந்தீப் சிங் மற்றும அவரது கூட்டாளி சச்சினை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 318 ஐபோன்களையும் பறிமுதல் செய்தனர்.