< Back
மாநில செய்திகள்
த.வெ.க. கொடியில் இடம்பெறுவது வாகை மலரா..? லோகோவா..?
மாநில செய்திகள்

த.வெ.க. கொடியில் இடம்பெறுவது வாகை மலரா..? லோகோவா..?

தினத்தந்தி
|
21 Aug 2024 1:26 PM IST

த.வெ.க. கொடி அறிமுக விழாவிற்கு பாதுகாப்பு கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இருப்பினும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், சென்னை பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் நாளை (வியாழக்கிழமை) அறிமுகம் செய்கிறார்.

இந்நிலையில், கட்சி கொடி அறிமுகம் செய்யப்படும் விழாவில் தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 250 நிர்வாகிகள் பங்கேற்க உள்ள நிலையில், பாதுகாப்பு கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஈசிஆர் சரவணன் தலைமையில் இந்த மனு அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் அறிமுகம் செய்யும் த.வெ.க. கொடியில் சமத்துவத்தை போற்றும் வகையில் லோகோ இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க. அறிக்கைகளில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகம் இடம்பெற்றுள்ள நிலையில், அதை மையமாக வைத்து லோகோ தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் விஜய் கட்சி கொடியில் வெற்றியை குறிக்கும் வாகை மலர் இடம்பெறுமா? அல்லது சமத்துவத்தை குறிக்கும் லோகோ இடம்பெறுமா? என தொண்டர்கள், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் செய்திகள்