< Back
மாநில செய்திகள்
தவெக மாநாடு: விக்கிரவாண்டியில் சுவர் விளம்பரம் வரையும் பணி மும்முரம்
மாநில செய்திகள்

தவெக மாநாடு: விக்கிரவாண்டியில் சுவர் விளம்பரம் வரையும் பணி மும்முரம்

தினத்தந்தி
|
11 Sept 2024 1:58 PM IST

மாநாட்டுக்கான அதிகாரப்பூர்வ தேதியை இன்னும் சில நாட்களில் விஜய் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழுப்புரம்,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்கிற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். சமீபத்தில் அக்கட்சிக்கான கொடியையும் அறிமுகப்படுத்திய அவர், கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் குறித்து முதல் மாநில மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று விஜய் அறிவித்தார்.

இதற்காக கட்சியின் முதல் மாநில மாநாட்டை பிரமாண்டமான முறையில் நடத்த தமிழக வெற்றிக்கழகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில் 85 ஏக்கர் பரப்பளவிலான இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்கு 33 நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநாட்டுக்கான அதிகாரப்பூர்வ தேதியை இன்னும் சில நாட்களில் விஜய் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் மற்றும் விஜய் ரசிகர்கள் பலரும், மாநாடு நடைபெறும் விக்கிரவாண்டி வி.சாலை பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களிலும், மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் மாநாட்டை வரவேற்றும், அதை நடத்தும் கட்சியின் தலைவர் நடிகர் விஜய்யை வரவேற்றும் தற்போது சுவர் விளம்பரங்களை வரையும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்