< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
திருச்சி-சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று தாமதமாக புறப்படும்
|17 Sept 2024 5:22 AM IST
வழக்கமாக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11 மணிக்கு இந்த ரெயில் சென்னைக்கு புறப்படும்.
திருச்சி,
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் என்ஜினீயரிங் மற்றும் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, இன்று காலை திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 11 மணிக்கு சென்னை எழும்பூருக்கு புறப்பட வேண்டிய சோழன் எக்ஸ்பிரஸ் (எண்:22676) 2 மணி நேரம் தாமதமாக மதியம் 1 மணிக்கு புறப்படும். இதனை திருச்சி ரெயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.