< Back
மாநில செய்திகள்
குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மாநில செய்திகள்

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தினத்தந்தி
|
15 Sept 2024 2:57 PM IST

மெயின் அருவி, புலியருவி, ஐந்தருவிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது

குற்றாலம்,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக பெய்த சாரல் மழையினால் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. குளிர்ந்த காற்று வேகமாக வீசி குளுமையான சூழல் நிலவுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில், தொடர் விடுமுறையையொட்டி குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். இன்று ஓணம் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், கேரளாவில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து அருவிகளில் உற்சாகமாக குளித்தனர்.

சபரிமலை நடை திறக்கப்பட்டதையொட்டி, அய்யப்ப பக்தர்களும் ஏராளமானோர் குற்றாலத்துக்கு வந்து அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர். இதனால் மெயின் அருவி, புலியருவி, ஐந்தருவியில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

மேலும் செய்திகள்