< Back
மாநில செய்திகள்
உங்கள் திறமையை கண்டு செஸ் உலகமே வியக்கிறது; பிரக்ஞானந்தாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
மாநில செய்திகள்

உங்கள் திறமையை கண்டு செஸ் உலகமே வியக்கிறது; பிரக்ஞானந்தாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

தினத்தந்தி
|
2 Jun 2024 12:11 PM IST

பிரக்ஞானந்தாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

12வது நார்வே சர்வதேச செஸ் தொடர் அந்நாட்டின் ஸ்வாடன்ஞர் நகரில் நடந்து வருகிறது. இதில் தலா 6 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், இந்தியாவின் பிரக்ஞானந்தா மற்றும் வைஷாலி பங்கேற்றுள்ளனர்.

இதனிடையே, கிளாசிகள் செஸ்சின் 3வது சுற்றில் பிரக்ஞானந்தா உலகின் நம்பன் 1 வீரர் மாக்னஸ் கால்சனை வீழ்த்தினார். இதனை தொடர்ந்து நேற்று நடைபெற்ற 5வது சுற்றில் உலக செஸ் தரவரிசையில் 2வது இடத்தில் உள்ள பாபியோனாவை பிரக்ஞானந்தா வீழ்த்தினார்.

தரவரிசையில் முதல் 2 இடங்களில் உள்ள வீரர்களை வீழ்த்தியதன் மூலம் பிரக்ஞானந்தா செஸ் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.

இந்நிலையில், பிரக்ஞானந்தாவுக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் முதல்-அமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், நார்வே செஸ் தொடரில் பிரக்ஞானந்தா மிகவும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கிளாசிகள் செஸ்சில் உலகின் நம்பர் 1 மற்றும் நம்பர் 2 வீரர்களை வீழ்த்துவது சிறப்பான சாதனையாகும். தரவரிசையில் முதல் 10 இடத்திற்குள் முன்னேறிய பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்துக்கள். உங்களின் திறமையை கண்டு ஒட்டுமொத்த செஸ் உலகமே வியக்கிறது

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்