திருப்பூர்: கார் - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து - 4 பேர் உயிரிழப்பு
|கார் - சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே கார் - சுற்றுலா வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
முன்னதாக பழனியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர், கிணத்துக்கடவில் உள்ள உறவினரின் இல்ல துக்க நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டு காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது மடத்துக்குளம் அருகே நான்குவழிச் சாலையில் காரும், வேனும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த சிறுவன் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சுற்றுலா வேனில் 20-க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில், 12 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.