< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி - தூத்துக்குடி இடையிலான பாசஞ்சர் ரெயில் சேவை ரத்து

கோப்புப்படம்

மாநில செய்திகள்

திருநெல்வேலி - தூத்துக்குடி இடையிலான பாசஞ்சர் ரெயில் சேவை ரத்து

தினத்தந்தி
|
17 Aug 2024 4:19 PM IST

திருநெல்வேலி - தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வரும் பாசஞ்சர் ரெயில் சேவையை ரத்து செய்வதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

சென்னை,

திருநெல்வேலி - தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரெயில் சேவையை ரத்து செய்வதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வரை தினசரி இயக்கப்பட்டு வரும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், பாசஞ்சர் ரெயில் சேவையை ரத்து செய்வதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலிக்கு இயக்கப்பட்ட பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை, நேற்று முன் தினம் முதல் தூத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டது.

அந்தவகையில் கேரள மாநிலத்தின் பாலக்காட்டிலிருந்து புனலூர் வரை இயக்கப்பட்டு வந்த பாலருவி எக்ஸ்பிரஸ் பயணிகளின் கோரிக்கையை அடுத்து செங்கோட்டை வரையும், பின்னர் திருநெல்வேலி வரையும் நீட்டிக்கப்பட்டு இயக்கப்பட்டு வந்தநிலையில் தூத்துக்குடி வரை இந்த ரெயில் சேவை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்