< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
"கலைஞரின் தமிழ் அன்புக்கு என் காணிக்கை இது" - கவிஞர் வைரமுத்து
|1 Aug 2024 9:20 AM IST
இது எவருக்கும் எட்டாதது வேறெந்தத் தலைவருக்கும் கிட்டாதது என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
மாண்புமிகு முதல்-அமைச்சருக்கு அழைப்பிதழ் தந்தேன்; கலைஞர் நூற்றாண்டு நிறைவுக்காகக் கலைஞர் குறித்து நூறு கவிஞர்களின் கவிதைகளைத் திரட்டி 'கலைஞர் 100 கவிதைகள் 100' என்ற தலைப்பில் தொகுத்திருக்கிறேன்.
பாவேந்தர் பாரதிதாசன், கவியோகி சுத்தானந்த பாரதியார், நாமக்கல் கவிஞர், முனைவர் மு.வ, முனைவர் இலக்குவனார் தொடங்கி நிகழ்காலக் கவிஞர்கள் வரை நீண்டு நிறைகிறது தொகுப்பு. இது எவருக்கும் எட்டாதது வேறெந்தத் தலைவருக்கும் கிட்டாதது.
07.08.2024 அன்று தமது முகாம் அலுவலகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதை வெளியிடுகிறார். அதை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி முதல்நூலை பெறுகிறார். நான் முன்னிலை வகிக்கிறேன். கலைஞரின் தமிழ் அன்புக்கு என் காணிக்கை இது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.