< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்:  மின்சாரம் பாய்ந்து 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

திருவள்ளூர்: மின்சாரம் பாய்ந்து 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

தினத்தந்தி
|
13 Oct 2024 2:43 PM IST

அயர்ன் செய்தபோது மின்சாரம் பாய்ந்து 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அருகே அயர்ன் செய்தபோது மின்சாரம் பாய்ந்து 9-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் விடையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரிபாபு. இவரது மகன் தீபக்குமார். இவர் விடையூர் அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு தீபக்குமார் தனது வீட்டில், பள்ளிச் சீருடையை அயர்ன் செய்துள்ளார். அப்போது திடீரென அயர்ன் பாக்சில் இருந்து மின்சாரம் பாய்ந்து தீபக்குமார் தூக்கி வீசப்பட்டு மயங்கி விழுந்தார்.

இதையடுத்து அவர் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்