< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், திருமாவளவன்   சந்திப்பு

கோப்பு படம் 

மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன், திருமாவளவன் சந்திப்பு

தினத்தந்தி
|
16 Sept 2024 7:15 AM IST

ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் பேசிய நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (திங்கட்கிழமை) சந்தித்தார்.

சென்னை,

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் 2 ஆம் தேதி மதுவிலக்கு மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்த மாநாட்டுக்கு அ.தி.மு.க., விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உள்ளிட்ட கட்சிகளுக்கும் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்து இருந்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக ஆட்சி அதிகாரத்தில் பங்கு என திருமாவளவன் பேசிய வீடியோவும் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த விவகாரம் பற்றி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் பலவிதமாக கருத்து தெரிவித்து வரும் சூழலில், தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று (திங்கட்கிழமை) நேரில் சந்தித்து பேசினார் சென்னை தலைமை செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.

மேலும் செய்திகள்