< Back
மாநில செய்திகள்
ரெயிலில் தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடமிருந்து நகைகளை பறித்துச்சென்ற கொள்ளையர்கள்
மாநில செய்திகள்

ரெயிலில் தூங்கிக்கொண்டிருந்த பெண்களிடமிருந்து நகைகளை பறித்துச்சென்ற கொள்ளையர்கள்

தினத்தந்தி
|
11 Aug 2024 3:45 PM IST

நள்ளிரவில் ரெயிலுக்குள் புகுந்த கொள்ளையர்கள், பயணிகளின் நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

விசாகப்பட்டினம்,

சென்னையில் இருந்து செகந்திராபாத்துக்கு நேற்று எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று புறப்பட்டது. இந்த ரெயிலானது, ஆந்திரா மாநிலம் தும்மல் செருவு ரெயில் நிலையம் அருகே நள்ளிரவில் சென்றபோது, ரெயிலின் எஸ்6 மற்றும் எஸ்7 பெட்டிகளின் அபாயச் சங்கிலியை இழுத்து ரெயிலுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், தூங்கி கொண்டிருந்த 3 பெண் பயணிகளின் கழுத்தில் இருந்து நகைகளை பறித்து தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மாநிலத்தின் நாடிக்குடி ரெயில் நிலையம் அருகே நரசாப்பூர் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்திய அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

மேலும் செய்திகள்