< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
'தமிழ்நாட்டில் சாலை வசதிகள் இல்லாத கிராமங்களே இல்லை' - அமைச்சர் ஐ.பெரியசாமி
|21 Aug 2024 7:59 PM IST
தமிழ்நாட்டில் சாலை வசதிகள் இல்லாத கிராமங்களே இல்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்கள் அடங்கிய மண்டலத்தில் 57 வழித்தடங்களில் புதிய பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன. இதனை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று தொடங்கி வைத்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 10 குடியிருப்புகள் இருக்கக் கூடிய பகுதிகளில் கூட சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் சாலை வசதிகள் இல்லாத கிராமங்களே இல்லை எனவும் தெரிவித்தார்.