< Back
மாநில செய்திகள்
திமுகவில் சீனியர்-ஜுனியர் சண்டை தொடங்கி விட்டது -  ஆர்.பி. உதயகுமார்
மாநில செய்திகள்

திமுகவில் சீனியர்-ஜுனியர் சண்டை தொடங்கி விட்டது - ஆர்.பி. உதயகுமார்

தினத்தந்தி
|
28 Aug 2024 6:53 PM IST

திமுகவில் சீனியர், ஜுனியர் விவகாரத்தில் ரஜினிகாந்த் பற்றவைத்த காட்டுத்தீயை எளிதாக அணைத்துவிட முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

மதுரை,

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

திமுகவில் சீனியர், ஜுனியர் சண்டை தொடங்கிவிட்டது,இது பிள்ளையார் சுழி. நடிகர் ரஜினிகாந்த் தி.மு.க.,வில் சத்தமில்லாமல் ஒரு நெருப்பை பற்ற வைத்துள்ளார். அதை எளிதாக அணைத்துவிட முடியாது. நகைச்சுவையை, பகைச்சுவையாக மாற்ற வேண்டாம் என அடுக்கு மொழியில் பேசினாலும், பற்ற வைத்த நெருப்பு இன்று எரிமலையாக புகைந்து கொண்டிருக்கிறது. அண்ணாமலை ஐபிஎஸ் படித்தாரா என தெரியவில்லை; தற்போது மேற்படிப்பிற்காக லண்டன் செல்கிறாராம். ஐபிஎஸ் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்தேன் என்கிறார். மற்றவர்கள் எல்லாம் பிட் அடித்தா பாஸ் ஆனார்கள் என்றார்.

மேலும் செய்திகள்