< Back
மாநில செய்திகள்
தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல்  சரிபார்க்கும் பணி இன்று தொடக்கம்
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி இன்று தொடக்கம்

தினத்தந்தி
|
20 Aug 2024 8:41 AM IST

வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி தொடங்கப்படவுள்ளது

சென்னை,

தமிழகம் முழுவதும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணி, இன்று தொடங்கப்படவுள்ளது. இன்று முதல் வரும் அக்டோபர் 18-ம் தேதி வரை வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்குச்சாவடி மறு சீரமைப்பு, வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் அடையாள அட்டை இடையேயான முரண்பாடுகளை நீக்குதல், வாக்காளர் பட்டியலில் நல்ல தரமான புகைப்படங்களை இணைத்தல், பகுதி எல்லைகளை உத்தேசமாக மறுசீரமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதனையடுத்து, ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வரும் அக்டோபர் 29-ம் தேதி வெளியிடப்படும். அக்டோபர் 29-ம் தேதியில் இருந்து நவம்பர் 28-ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல், ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம் செய்தல், திருத்தங்கள் மற்றும் இடமாற்றம் செய்தல் ஆகியவற்றிற்கான விண்ணப்பங்கள் பெறப்படும். விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் டிசம்பர் 24-ம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு, அடுத்த ஆண்டு ஜனவரி 6-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

மேலும் செய்திகள்