< Back
மாநில செய்திகள்
ஓடும் ரெயிலில் ஏறியபோது தவறி விழுந்த பயணி.. நொடிப்பொழுதில் காப்பாற்றிய போலீசார்
மாநில செய்திகள்

ஓடும் ரெயிலில் ஏறியபோது தவறி விழுந்த பயணி.. நொடிப்பொழுதில் காப்பாற்றிய போலீசார்

தினத்தந்தி
|
24 Sept 2024 10:58 AM IST

எதிர்பாராதவிதமாக கால் தடுமாறி ரெயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே பயணி சிக்கிக்கொண்டார்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரெயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் சென்னை நோக்கி புறப்பட்ட விரைவு ரெயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் உச்சிப்புளி பகுதியை சேர்ந்த ரெயில் பயணி ஒருவர் ஏறி வந்துள்ளார். அவர் ராமநாதபுரம் ரெயில் நிலையத்துக்கு ரெயில் வந்தவுடன் அதில் இருந்து இறங்கி நின்றதாக கூறப்படுகிறது. பின்னர் ரெயில் புறப்பட்டவுடன் ஓடும் ரெயிலில் ஏற முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக அந்த பயணி கால் தடுமாறி ரெயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையே சிக்கிக்கொண்டார். இதனை கவனித்த பணியில் இருந்த ரெயில்வே போலீஸ்காரர் ஒருவர் உடனடியாக ரெயிலை நிறுத்தி தண்டவாளத்துக்கும் ரெயிலுக்கும் இடையே சிக்கிக் கொண்டவரை லாவகமாக மீட்டனர். உடலில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அந்த பயணி ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ரெயிலுக்கும் நடைமேடைக்கும் இடையில் சிக்கிய பயணியை ரெயில்வே போலீசார் மீட்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

மேலும் செய்திகள்