< Back
மாநில செய்திகள்
மதுரையில் ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் 3 மணி நேரத்தில் மீட்பு
மாநில செய்திகள்

மதுரையில் ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவன் 3 மணி நேரத்தில் மீட்பு

தினத்தந்தி
|
11 July 2024 5:46 PM IST

சிறுவனை இறக்கிவிட்டு தப்பியோடிய கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை,

மதுரையில் ரூ.2 கோடி கேட்டு கடத்தப்பட்ட 14 வயது பள்ளி மாணவன் 3 மணி நேரத்தில் மீட்கப்பட்டார். எஸ்எஸ் காலனியில் இருந்து ஆட்டோவில் பள்ளிக்கு சென்ற மாணவரை கடத்தி அவரது தாயாரிடம் ரூ.2 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தனர்.

ஆட்டோ ஓட்டுநருடன், மாணவரை கடத்திய கும்பல் அவரது தாயார் மைதிலியை தொடர்பு கொண்டு ரூ.2 கோடி கேட்டது. ரூ.2 கோடி தராவிட்டால் சிறுவனை கொன்று விடுவதாகவும், போலீசுக்கு போனாலும் கண்டுபிடிக்க முடியாது எனவும் மிரட்டல் விடுத்தனர்.

இது குறித்து எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் உடனடியாக களத்தில் இறங்கிய தனிப்படை போலீசார், சிறுவனை தேடி வந்தனர். போலீசார் நெருங்கி வருவதை அறிந்து, சிறுவனை, ஆட்டோவில் இருந்து நாகமலை புதுக்கோட்டை 4 வழிச்சாலையில் இறக்கிவிட்டு கும்பல் தப்பியது. சிறுவனை இறக்கிவிட்டு தப்பியோடிய கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்