< Back
சினிமா செய்திகள்
ராயன்  படத்தின் 2வது பாடல் வெளியானது
சினிமா செய்திகள்

'ராயன்' படத்தின் 2வது பாடல் வெளியானது

தினத்தந்தி
|
24 May 2024 6:27 PM IST

படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்

சென்னை,

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடிக்கும் 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. தற்போது தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தனுஷ் நடித்து இயக்கும் அவரது 50-வது படமான 'ராயன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் இந்த படம் ஜூன் மாதம் வெளியாக உள்ளது.

துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகிய மூன்று நாயகிகள் நடிக்கும் இந்த படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். ராயன் படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், 'ராயன்' படத்தின் 2வது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி 'வாட்டர் பாக்கெட்' என்ற 2வது பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடல் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது

மேலும் செய்திகள்