< Back
மாநில செய்திகள்
மேகதாது அணை கட்டினால் கர்நாடகாவை விட தமிழகமே அதிக பயன்பெறும் - டி.கே.சிவக்குமார்
மாநில செய்திகள்

மேகதாது அணை கட்டினால் கர்நாடகாவை விட தமிழகமே அதிக பயன்பெறும் - டி.கே.சிவக்குமார்

தினத்தந்தி
|
3 Sept 2024 12:32 PM IST

இரண்டு மாநிலத்திற்கும் வருண பகவான் உதவுவார் என கர்நாடக துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறினார்.

சென்னை,

கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் சென்னை சேத்துப்பட்டில் இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை பார்வையிட்டு, செயல்பாடுகளை கேட்டறிந்தார். திடக்கழிவு மேலாண்மை குறித்தும் ஆய்வு செய்தார். பெங்களூருவில் திடக்கழிவு மேலாண்மையை மேம்படுத்துவது தொடர்பாக சென்னையில் ஆய்வு செய்துள்ளார்.

இதன் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மேகதாது அணை தொடர்பான கேள்விகளுக்கு அவர் பதிலளித்து பேசியதாவது;

"மேகதாது அணை தமிழ்நாட்டுக்காக தான். மேகதாதுவில் அணை கட்டினால் கர்நாடகாவை விட அதிக பயன்பெறுவது தமிழ்நாடு தான். தற்போது போதிய அளவு மழை பெய்துள்ளதால் மேகதாது அணை குறித்து பேச வேண்டிய அவசியம் இல்லை. இரண்டு மாநிலத்திற்கும் வருண பகவான் உதவுவார்." என்றார்.

மேலும் செய்திகள்