தாம்பரம்- கோவை சிறப்பு ரெயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
|தாம்பரத்தில் இருந்து கோவைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.
சென்னை,
விஜயதசமி, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தாம்பரம் -கோவை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரெயில் கும்பகோணம், திண்டுக்கல், பழனி வழியாக இயக்கப்படும். . இது குறித்து தெற்கு ரெயில்வே கூறியிருப்பதாவது:
தாம்பரத்தில் இருந்து கோவைக்கு அக்.11 முதல் நவ.29-ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு ரெயில் (எண்: 06184) இயக்கப்படும். தாம்பரத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு புறப்படும் ரெயில் மறுநாள் காலை 8.10 மணிக்கு கோவை சென்றடையும். . மறுமாா்க்கமாக கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (எண்: 06185) மறுநாள் பகல் 12.30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். .
இந்த சிறப்பு ரெயில் செங்கல்பட்டு, மேல்மருவத்தூா், திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, திருப்பாதிரிப்புலியூா், சிதம்பரம், சீா்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூா், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூா் வழியாக இயக்கப்படும். .இதன்மூலம் டெல்டா - கொங்கு மாவட்டங்களுக்கு இடையே பயணிக்கும் மக்கள் பயனடைவா் என தெரிவிக்கப்பட்டுள்ளது