< Back
மாநில செய்திகள்
விமான சாகச நிகழ்ச்சிக்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை - ஜெயக்குமார் குற்றச்சாட்டு
மாநில செய்திகள்

விமான சாகச நிகழ்ச்சிக்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

தினத்தந்தி
|
7 Oct 2024 5:00 AM IST

விமான சாகச நிகழ்ச்சிக்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை,

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருப்பதாவது;

சுட்டெரிக்கும் வெயிலில் சுடும் மணலில் மக்கள் பரிதவிக்கும் நிலையில் மத்திய-மாநில அரசுகளும் அவர்களது குடும்பங்களும் மட்டும் பல வசதிகள் கொண்ட பந்தலில் அமர்ந்திருப்பது கார்ப்பரேட் ஆட்சியின் அவலத்தை கண்முன் காட்டுகிறது. குடிநீர்,உணவு, தற்காலிக கழிப்பறை போன்ற எதுவும் ஏற்படுத்தப்படவில்லை. ரெயில்களில் மக்கள் தொங்கியபடி பயணம் செய்தனர்.

ஆனால் ஸ்டாலின் பேருந்துகளை காணவில்லை. முறையான முன்னேற்பாடுகளை அரசு ஏற்படுத்தாத காரணத்தால் காவல்துறையினருக்கும் மக்களுக்கும் இடையே வாக்குவாதங்கள் நிகழ்ந்தன. விமான சாகச நிகழ்ச்சிக்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளர் பணிச்சுமையின் காரணமாக உயிரிழந்தார். காவல்துறையினருக்கு அதிக வேலையும் அழுத்தமும் கொடுப்பது வேதனைக்குரியது. நிர்வாகம்,கிலோ எவ்வளவு? எனக் கேட்கக் கூடிய முதலமைச்சராக தான் ஸ்டாலின் உள்ளார்.

இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்