< Back
மாநில செய்திகள்
தமிழக மீனவர்களை அச்சுறுத்த இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு
மாநில செய்திகள்

தமிழக மீனவர்களை அச்சுறுத்த இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு

தினத்தந்தி
|
26 Sept 2024 9:29 AM IST

தமிழக மீனவர்களை அச்சுறுத்த இலங்கை கடற்படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

சென்னை,

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் விரட்டியடித்து தாக்கப்படுவதும் படகுடன் மீனவர்கள் கைது செய்து சிறையில் அடைக்கப்படும் சம்பவங்களும் கடந்த சில மாதங்களாகவே அதிகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சுமார் 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். கச்சத்தீவு அருகே ஆழ்கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளில் ஏறி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் படகுகளில் இருந்த மீன்பிடி சாதனங்களையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.

மேலும் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள் விரைந்து கரைக்கு திரும்பினர். இதுவரை இல்லாத அளவிற்கு அதிகப்படியான ரோந்து கப்பலில் இலங்கை கடற்படை வந்ததாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியத்தால் ஒரு படகிற்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இலங்கை கடற்படையினரின் இந்த நடவடிக்கைக்கு மத்திய மாநில அரசுகள் நிரந்தர தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்