< Back
மாநில செய்திகள்
திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்
மாநில செய்திகள்

திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கம்

தினத்தந்தி
|
18 Aug 2024 12:54 AM GMT

திருவனந்தபுரம் - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

சென்னை,

வேளாங்கண்ணி மாதா ஆலயம் திருவிழாவையொட்டி பொதுமக்களின் நலன் கருதி திருவனந்தபுரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில் (ரெயில் எண்-06115) இயக்கப்பட உள்ளதாக தென்னக ரெயில்வே தெரிவித்துள்ளது. இந்த ரெயில் வருகிற 21, 28-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் (செப்டம்பர்) 4-ந் தேதி ஆகிய நாட்களில் இயக்கப்பட உள்ளது.

திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ரெயிலானது புதன்கிழமை தோறும் மதியம் 3.25 மணிக்கு புறப்படும். பின்னர் மாலை 4.11 மணிக்கு குழித்துறை, 6.40 மணிக்கு நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையம் வந்து வள்ளியூர் மற்றும் நெல்லை வழியாக மறுநாள் அதிகாலை 4 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.

இந்த ரெயில் (ரெயில் எண்-06116) மறு மார்க்கத்தில் 22, 29 மற்றும் செப்டம்பர் 5-ந் தேதிகளில் வேளாங்கண்ணியில் இருந்து திருவனந்தபுரத்துக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்