< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கனிமொழி குறித்து அவதூறு பேச்சு - அ.தி.மு.க. நிர்வாகி சசிரேகா மீது புகார்
|27 Sept 2024 9:29 AM IST
கனிமொழி குறித்து அவதூறாக பேசியதாக சசிரேகா மீது தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளனர்.
சென்னை,
தி.மு.க. எம்.பி. கனிமொழி குறித்து அ.தி.மு.க. நிர்வாகி சசிரேகா, கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது அவதூறான கருத்துகளை பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இந்த நிலையில், கனிமொழி குறித்து அவதூறாக பேசியதாக சசிரேகா மீது தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளனர்.
கனிமொழியை இழிவுபடுத்தும் நோக்கில் தரக்குறைவாகவும், தனிமனித ஒழுக்கத்தை பொருட்படுத்தாமலும் பேசிய சசிரேகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளர் கோமளவள்ளி தலைமையில் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.