< Back
மாநில செய்திகள்
டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமனம்

தினத்தந்தி
|
13 Aug 2024 4:56 PM IST

டிஎன்பிஎஸ்சி தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அவ்வபோது உரிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வு நடத்தி பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் புதிய தலைவராக எஸ்.கே.பிரபாகர் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வருவாய் நிர்வாக ஆணையராக பணிபுரிந்து வந்தார். தமிழ்நாடு அரசின் பரிந்துரைக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்ததை அடுத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தலைவராக நியமிக்கப்பட்ட எஸ்.கே.பிரபாகர், பொறுப்பேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அல்லது 62 வயது வரை பதவியில் இருப்பார் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்