< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டையில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை
மாநில செய்திகள்

புதுக்கோட்டையில் என்கவுண்டரில் ரவுடி சுட்டுக்கொலை

தினத்தந்தி
|
11 July 2024 6:20 PM IST

போலீசாரை ரவுடி துரை தாக்கியதால் பாதுகாப்பிற்காக துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுக்கோட்டை,

திருச்சி எம்ஜிஆர் நகரை சேர்ந்த ரவுடி துரை. இவர் புதுக்கோட்டை வம்பன் காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து போலீசார் காட்டுப்பகுதிக்கு சென்றனர். ரவுடி துரையை பிடிக்க சென்றபோது போலீசாருக்கும் ரவுடி துரைக்கும் மோதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து போலீசாரை ரவுடி துரை தாக்கியதால் பாதுகாப்பிற்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

யார் இந்த ரவுடி துரை?

ரவுடி துரை என்கிற ( துரைசாமி) மீது ஏற்கனவே 70 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். சரித்திர பதிவேடு குற்றவாளியான ரவுடி துரை மீது 4 கொலை வழக்கு, கொலை முயற்சி, வழிப்பறி, திருட்டு உள்பட 70 வழக்குகள் உள்ளன. 2023-ல் திருச்சியில் ஏற்கனவே திருட்டு வழக்கிற்காக விசாரணைக்கு அழைத்துசென்றபோது தப்பி சென்றவர் ரவுடி துரை.

ரவுடி என்கவுன்ட்டர் - நடந்தது என்ன?

திருவரங்குளம் காட்டுப்பகுதியில், துரைசாமி ஆயுதங்களுடன் சுற்றித்திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஆலங்குடி இன்ஸ்பெக்டர் முத்தையன் தலைமையில் 4 போலீசார் காட்டு பகுதிக்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

போலீசாரை பார்த்ததும், தாக்கிவிட்டு தப்ப முயன்ற போது துரைசாமி சுடப்பட்டார். கடந்த 2022 டிசம்பரில் இளவரசன் என்ற ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில், துரைசாமி முக்கிய குற்றவாளி என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்